முன்னல்லாம் நான் நிறைய பிளாக் படிக்கிரது வழக்கம். இப்பவும் அந்த பழக்கம் அதிகமாவே இருக்கு. ஆனா கொஞ்சநாளா நான் ஃபேவரைட் எடுத்து வச்ச பக்கத்தை திறந்தா அந்த பக்கம் கண்டறியப்படவில்லைன்னு ஒரே எர்ரர் மெசேஜா வருது..
அதுல சில பேரோட மெயில அட்ரஸ் என்னிடம் இருந்ததால அவங்களை கேக்கும் போது என்னன்னு தெரியல திறக்க மாட்டேங்குதுன்னு பதில வருது .
ஒரு வேளை எதுவும் ஆட்வேர் பிராப்ளமான்னு கூகிள் கிட்டயும் கேட்டு பாத்ததுக்கு சரியான பதில இல்லை . அப்ப இத்தனை நாள் மாங்கு மாங்குன்னு எழுதியதுக்கு என்ன அர்த்தம். நானாவது சும்மா மொக்கையா எழுதி வரேன் . ஏதோ என்னால முடிஞ்சது
ஆனா நிறை பேர் தன்னோட > கதை , கவிதை , சமையல் , போட்டோக்கள் இப்படி திரும்பி கிடைக்காத பல நல்ல விசயங்கள் எழுதி வருபவங்களின் கதி என்ன ஆவது . ஒரு சில தவறான பிண்ணூட்டத்தால் மூக்கால் அழும் ஆட்களும் இருக்கும் போது மொத்த பிளாக்கும் கானாமல் போனால் என்ன செய்வாங்களோ தெரியல.
இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் ஐயா , அம்மா ,அக்கா, தங்கச்சி , தம்பி , அண்ணாக்களே !! உடனே உங்க பிளாக்கு , மற்றும் டெம்லேட்டுகளை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . அது தவிர ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் அல்லது முடிவிலும் பேக்கப் எடுப்பதை மறக்க வேண்டாம் . புதியது எடுத்ததும் பழையதை டெலிட் செய்துடுங்க. அப்படி தேவை பட்டால் இரண்டு எடுத்து வையுங்க
டெம்லேட்டில் புதியதாக எதுவும் சேர்தால் மட்டும் அதை மீண்டும் பேக்கப் எடுக்கவும் . அப்படி இல்லாவிட்டால் ஒன்னு மட்டும் போதுமானது. எடுக்க தெரிந்தவர்க்கு ஓக்கே தெரியாதவர்க்கு மேலே படிங்க
உங்களுடைய டேஷ்போர்டில செட்டிங்க்ஸ் கிளிக் பண்ணினா வரும் முதல் பக்கத்தில் முதல் வரியில் இம்போர்ட் பிளாக் --எக்ஸ்போர்ட் பிளாக் – டெலிட் பிளாக் இப்படி மூனு ஆப்ஷன் இருக்கும் . இதில் நமக்கு வேண்டியது இரண்டாவதா இருக்கும் எக்ஸ்போர்ட் பிளாக் மட்டுமே.
அதை கிளிக் பண்ணினா வரும் பக்கத்தில் டவுன்லோட் பிளாக் என்கிற பட்டனை கிளிக்கி எங்கே சேவ் பண்ணுமோ அங்கே பத்திரமா சேவ் பண்ணி வையுங்க. ஒரு வேளை உங்க பிளாக் கானாம போனால் மீண்டும் அதே டேஷ் போர்ட் > செட்டிங்ஸ் > இப்ப இம்போர்ட் பிளாக் கிளிக் பண்ணீனா வரும் பக்கத்தில நீங்க உங்க ஃபைல எங்க பத்திரமா வச்சிங்களோ அந்த இடத்தை பிரவுஸ் பண்ணி அதன் கிழே உள்ள வார்த்தயை டைப்பி இம்போர்ட் பட்டனை கிளிக்கினால் உங்க பழைய பதிவு அப்படியே கிடைக்கும்.
அப்புறம் டெம்லேட்டுக்கு டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் காப்பி பண்ணி ஒரு நோட் பேடில் பேஸ்ட் செய்யுங்க. இதுக்கு ஒரு பேர் குடுத்து பத்திரமா வையுங்க.
எப்பவாவது உங்க பிளாக் டெலிட் ஆனா புதுசா ஒரு பிளாக் தொடங்கி அதில மீண்டும் இது போல டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து டெலிட் பண்ணுங்க , உங்க நோட் பேடில உள்ளதை காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணி பிளாக சேவ் பண்ணிணால் பழைய டெம்ப்லேட் மற்றும் அனைத்து பழைய சங்கதிகளும் மின்னும்.
நான் ஆரம்பத்தில சொன்னவங்ககிட்ட கேட்டேன் இது மாதிரி எதுவும் இருக்கான்னு இல்லைன்னு பதில் வந்துச்சி. என்னத்த சொல்ல .நாளை உங்களுக்கும் இது போல ஆகும் முன்னால் >>>>
கண்ணதாசா என்ன மன்னிச்சிடுப்பா!!
கண்ணதாசா என்ன மன்னிச்சிடுப்பா!!
பிளாக்கே மாயம் இந்த பிளாக்கே மாயம்
வெப்பின் மீது காணும் யாவும், கூகிளில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
கூகிலேடு யார் போட்டி போடுவது ? அப்படி நாம் போடும் போது,
யாரோடு யார் நாம் கேட்பது?
(பிளாக்கே)
யாரார்க்கு என்ன தலைப்போ ? இங்கே
யாரார்க்கு எந்த டெம்ப்லேட்டோ?
பிளாக் இருக்கும் வரைக் கூட்டம் வரும்,
பிளாக் நின்றால் ஓட்டம் விடும்!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)
மொக்கை போட்டாலும் ஓட்டு போடுவார் , இங்கே
அப்படி இல்லாட்டாலும் கருத்து போடுவார்
பிளாக் உண்டாவது உண்ணாலதான்!
பேர் கெட்டு போவதும் உண்ணாலதான்!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி போனது!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி போனது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)
நிலைக்காதம்மா...!
கூகிலேடு யார் போட்டி போடுவது ? அப்படி நாம் போடும் போது,
யாரோடு யார் நாம் கேட்பது?
(பிளாக்கே)
யாரார்க்கு என்ன தலைப்போ ? இங்கே
யாரார்க்கு எந்த டெம்ப்லேட்டோ?
பிளாக் இருக்கும் வரைக் கூட்டம் வரும்,
பிளாக் நின்றால் ஓட்டம் விடும்!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)
மொக்கை போட்டாலும் ஓட்டு போடுவார் , இங்கே
அப்படி இல்லாட்டாலும் கருத்து போடுவார்
பிளாக் உண்டாவது உண்ணாலதான்!
பேர் கெட்டு போவதும் உண்ணாலதான்!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி போனது!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி போனது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)
டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது.