Friday, August 20, 2010

ரிங் டோனா இல்லை என் டோனா


          போன பதிவுல வந்த அனுபவம் என் ஃபிரண்டு ஒருவனுக்கு வந்தது .முடிவு மட்டும் என்னுடையது . இதில வருவது நானே பல்ப் வாங்கிய மெகா அனுபவம்தான் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை ( டியூட்டி டைமில் ) கிண்டல் கேலி கும்மியதின் விளைவு அன்னைக்கு அவஸ்தை பட வேண்டியதாகி விட்டது . அவனும் நல்ல பிள்ளையா எதுவுமே வாய திறக்கல
         ஒரு நல்ல ரிங்டோன் ( ராத்திரியில கேட்டா சின்ன பிள்ளங்ககூட தானா உச்சா போய்டுவாங்க அவ்வளவு டெர்ரர் ) காப்பி பண்ண அவனுடைய மெமரி கார்ட கழட்டி என்னுடைய மொபைலில் போட்டு காப்பி செஞ்சேன் . அது வரை நல்லாதான் போச்சு. இது நடந்தது  காலை 7 மணி இருக்கும்
எலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

         எப்படியும் கால் மணிக்கு ஒரு தடவையாவது நம்மளை கூப்பிட்டு கழுத்தறுக்கும் யாரும் அன்னைக்கு 9 மணி வரைக்கும் கூப்பிடலை .பயபுள்ளைங்க திருந்திட்டானுங்க போலன்னு நினைச்சு போனை எடுத்து  பார்த்தா நா போனை ஆன் பண்ணவே இல்லை . சரின்னு ஆன் பண்ணி வச்ச உடனே ரிங் தங்கமணி கிட்டேயிருந்து இது எப்பத்திலோந்து போனை ஆஃப் பண்ணி வைக்கும் பழக்கமுன்னு ,  பேசிக்கிட்டு இருக்கும் போதே ஆட்டோமாடிக்கா ஆஃபாகி ரீஸ்டார்ட் ஆனது .  சரி பேட்டரிதான் சரியா இன்னைக்கு சார்ஜ் ஆகலையோன்னு பார்த்தா சரியாதான் இருந்துச்சி. உடனே தங்ஸ் கிட்டேயிருந்து திரும்ப ரிங் வந்துச்சு அதென்ன பேசிகிட்டேயிருக்கும் போது புது பழக்கம் லைன கட்பன்..ற..து......திரும்பவும் ரீஸ்டார்ட்..
 
         இப்பிடியே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்ததால என்ன செய்வதுன்னு தெரியல டென்ஷனுக்கு மேல டென்ஷன் . மேனேஜரையே சமாளிச்சுடலாம் தங்ஸ சமாளிக்க முடியுமா .?. ஒரு வழியா அதுக்கு பரிகாரம் என்னன்னு பார்த்ததுல புளுடுத்-ஐ ஆன் பண்ணி வைத்தால் ரிஸ்டார்ட் ஆகல . தப்பிச்சேன்னு ரிலாக்ஸ் ஆனேன் .ஆனா இந்த நிம்மதி அரை மணிநேரம் கூட நீடிக்கல. பக்கத்துல யார்  புளு டூத் ஆன்ல இருக்கோ அவங்களுக்கு மெசேஜ் அனுப்ப வான்னு உடனே என் ஸ்கிரீனில் வரும் .
நா சொல்றதை நல்ல பிள்ளையா கேக்கோனும்

       இதுப் போல அவங்க ஸ்கிரீனினும் ரிசீவ் பண்ணவான்னு கேக்கும் . பயந்துகிட்டு யூசர் பேர மாத்தி வச்சேன் .இல்லாட்டி இவனுககிட்ட  மாட்டிகிட்டு யார் தர்ம அடி வாங்குறது .  அப்ப தான் புரிஞ்சுது இது வைரஸின் வேலைன்னு . டியூட்டி டைமும்  முடிஞ்சி ப்போச்சி சரி  மீதியை நாளைக்கு டியூட்டி டைமிலேயே பாத்துக்கலாம் இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன்  
      சரியா அரை மணிநேரத்துல போன் தூக்க கலக்கத்தில பாதி கண்ணை திறந்து பார்த்தா புது நெம்பர் ஒரு பங்ளாதேஷி. பொந்து பாய் தும் முஜே மிஸ் கால் கியா “ ( சகோ நீ எனக்கு மிஸ்ட் கால் செஞ்சியான்னு அர்த்தம் ) ..நான் “இல்லையே “  “ அப்ப இது உன் நெம்பர்தானே “  ஆமா இது என் நெம்பர்தான் “ என்னது இது சின்ன புள்ளதனமான்னு கேக்க நா உடனே சமாளிச்சிகிட்டு சாரி ராங் நம்பரா போயிடுச்சி போலன்னு சொல்லி வச்சிட்டேன்.
ஏன் என்னை பாக்க மாட்டீங்களா நானும் பேபிதான்.

       இப்பிடி மதியம் முழுக்க என் தூக்கம் போனதுதான் மிச்சம் .அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும்  , லோக்கலாவது பரவாயில்லை  .ஒரு ஆள் ஓமானிலிருந்து போன் பண்ணி திட்டினான் . இப்பிடியே ஒரு  பஞ்சாபி பொண்னு ( அதுக்கு என்ன கஷ்டமோ ) , கடைசியா அரபி பொண்ணு ( 20 வயசாவது இருக்கும் , எப்படி வயசு தெரியுமுன்னு குறுக்கு கேள்வி யாரும் கேக்க பிடாது ) திட்டிய போதுதான் மண்டையில உறைச்சது. ஆஹா இது போலீஸ் கேசா போயுடுமோன்னு . முதல் வேலையா பேட்டரி ,  சிம் வரை தனியா கழட்டி வச்சிட்டேன்
   
       ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான் . 
        மறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது . ஒரு தடவை சொந்த கம்ப்யூட்டரில இந்த வேலைய செஞ்சி நான் பட்ட அவஸ்தை ஒரு மெகா தொடரே போடலாம் . அதிலிருந்து  யாரிடமும் எதுவும் போன் வழியா வாங்குவதுமில்லை கொடுப்பதுவுமில்லை.
பயபுள்ள இங்கேதானே இருந்தான்  , ஜஸ்ட் மிஸ்ட்

        இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..   
           

139 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹேமா said...

ஓ...இண்ணைக்கு வியாழக்கிழமை.
இண்ணைக்குத்தான் லீவு முடிஞ்சு வந்திருக்கேன்.படங்களே பதிவை
ரசிக்க வைக்குது ஜெய் !

எம் அப்துல் காதர் said...

நான் தான் 1st,, இருங்க படிச்சிட்டு வர்ரேன்.

athira said...

ஆ..... 2 ஆவதா வந்தவர்களே நாந்தான் 1ஸ்ட் என்னும்போது, 3 வதாக வந்த நானும் 1ஸ்ட் எனச் சொல்வதில் தப்பேயில்லை.... ஆ.... அப்போ “வட” எனக்கே எனக்குத்தான்.... வாசிச்சுப்போட்டு(கவனிக்கவும் ஜெய்.. படிச்சிட்டல்ல:)) வருகிறேன்.

athira said...

ஜெய்... சொல்றதை விளக்கமா சொல்லோணும், நீங்க பாட்டுக்கு தங்கமணி என்றதை, நான் அப்பாவித் தங்கமணியாக்கும் என தப்பா நினைச்சுட்டேன்.... பிறகு தங்ஸ்ஸ் என்றதும்தான் புரிஞ்சுது, அது என்னமோ தெரியேல்லை, ஸ்ஸ்ஸ் சேர்த்தாதான் எல்லாம் விளக்கமா புரியுது.

நீங்க குண்டா இருப்பீங்களோ என்றொரு சந்தேகம்:), 2வது படத்தைப் போட்டுக்காட்டி, அதை நிரூபிச்சிட்டீங்க:))).

பூனையாரின் எனவுண்ஸ்மெண்ட் சூப்பரோ சூப்பர்...

பேபி பூஸைப்பற்றி(படத்திலிருக்கும்:)) ஒன்றும் சொல்றதுக்கில்ல:).

athira said...

கடசிப்படமும் கப்ஸனும்... கலக்கிட்டீங்க:)..

ஒரே ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறனே ஜெய்...... எப்படிக்கண்டுபிடிச்சீங்க.... வயசையும்(20), அரபிப்பொண்ணுதான் என்பதையும்..... போனிலே.... பேர்பியூம் வாசம் ஏதும் வந்துதோ?:)).

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா.. இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா நாங்களும் போன் பண்ணி தெரியாத மொழியில திட்டியிருப்போமே..

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//

இனிமே சந்தேகம் ஏதும் கேட்டா அப்புறம் தூக்கத்தில இண்டர்னேஷனல் ராங் கால்கள் வரும் (உங்களுக்குத் தான்) சொல்லிட்டோம் ஆமா!!

சுசி said...

என்ன ஒரு நல் மனம்..

//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் //

Starjan (ஸ்டார்ஜன்) said...

///இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..///

என்னே ஒரு.. ஆஹா.. இதுவல்லவோ நண்பன்.. வாழ்க வளமுடன்.. :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

//

ஏன்னா ஒரு நல்ல மனசு...

ப.கந்தசாமி said...

//யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்//

என்னங்க இது. வைரஸ் அட்டாக்குல பால பாடமே இதுதானுங்களே. எப்படி கோட்டை விட்டீங்க?

சீமான்கனி said...

//நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி.. //

ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..நல்லது

எம் அப்துல் காதர் said...

//ஆ..... 2 ஆவதா வந்தவர்களே நாந்தான் 1 ஸ்ட் என்னும்போது, 3 வதாக வந்த நானும் 1ஸ்ட் எனச் சொல்வதில் தப்பேயில்லை.... ஆ.... அப்போ “வட” எனக்கே எனக்குத்தான் //

சரி நாம மூணு பேரும் 3-பங்கு போட்டுக்குவோம், இல்ல 1-ஸ்ட்ல வந்த, ஹேமா Siss-கே விட்டுக் கொடுத்திடுவோம். அதான் நல்லப் பிள்ளைக்கு அழகு. இப்ப தான் அவங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க. டயர்டா இருப்பாங்க. சாப்பி டட்டும். சரியா!!

எம் அப்துல் காதர் said...

//மறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது. //

டூட்டி நேரத்துல தான் இவ்வளவும் நடக்குமா பலே பலே.. எங்ககிட்ட எல்லாம் ஆணி ஆணி என்று சொல்வது சும்மா உடான்ஸ் தானா. சரி அந்த டேமேஜரோட செல் நம்பர் ப்ளீஸ்?? க்கி..க்கி..

எம் அப்துல் காதர் said...

//ஒரே ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறனே ஜெய்...... எப்படிக் கண்டுபிடிச்சீங்க.... வயசையும்(20), அரபிப்பொண்ணுதான் என்பதையும்..... போனிலே.... பேர்பியூம் வாசம் ஏதும் வந்துதோ?:)).//

ரொம்ப சிம்பிள் அதிரா சிஸ், "மீன் அன்தா (யார் நீ?) என்று ஆரம்பித்து அந்த பொண்ணு கத்தின கத்துல, நம்ம ஆளு “கருவாடு” மாதிரி முழிச்சிருக்கும், இது தான் நடந்திருக்கும். வேண்ணா கேட்டுப் பாருங்க. பதில் சொல்லாது. அழுத்தம் தாஸ்தி. ஹி..ஹி..

http://rkguru.blogspot.com/ said...

///ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது///

yenakku purinththathu...

தூயவனின் அடிமை said...

என்னது கைபேசி பழுது பார்க்க 100 திர்ஹமா? தல இங்க 90 ரியால் கொடுத்தா கைபேசியே வாங்கிடலாம்,
அது சரி வைரஸ் வைரஸ் என்று எல்லாரும் சொல்றாங்கள அது யாரு பாஸ்?.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஓ...இண்ணைக்கு வியாழக்கிழமை.
இண்ணைக்குத்தான் லீவு முடிஞ்சு வந்திருக்கேன். படங்களே பதிவை ரசிக்க வைக்குது ஜெய் ! //

வாங்க குழந்தை நிலா ..!!எங்கே ஆளை கானோமே ரொம்ப நாள் ஆச்சேன்னு நினைத்து ரெண்டு நிமிஷம் கூட ஆகல உடனே வந்துட்டீங்க அயுள் 200 வருஷம் கண்டிப்பா உங்களுக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//நான் தான் 1st,, இருங்க படிச்சிட்டு வர்ரேன். //

வாங்க பாஸ். அதே நிமிஷம் ஆனா ஜஸ்ட் மிஸ்ட். படிங்க பொருமையா படிங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy said...

அடடா! எனக்கும் முன்பே தெரிந்திருந்தால் நானும் திட்டியிருப்பேன். சந்தூதூ போல.
நானும் அப்பாவி தங்கமணி உங்களை கூப்பிட்டு திட்டினாங்களோ என்று நினைத்தேன். விளக்கமா சொன்னாதானே விளங்கும்.
இந்த தொல்லைகளால் தான் நான் இந்த செல் போன் பக்கம் போறதே இல்லை.

//நீங்க குண்டா இருப்பீங்களோ என்றொரு சந்தேகம்:), 2வது படத்தைப் போட்டுக்காட்டி, அதை நிரூபிச்சிட்டீங்க:))).//

ஜெய் குண்டன் அல்ல. எனக்குத் தெரியும்.

ஜெய்லானி said...

@@@athira--//ஆ..... 2 ஆவதா வந்தவர்களே நாந்தான் 1ஸ்ட் என்னும்போது, 3 வதாக வந்த நானும் 1ஸ்ட் எனச் சொல்வதில் தப்பேயில்லை.... ஆ.... அப்போ “வட” எனக்கே எனக்குத்தான்.... வாசிச்சுப்போட்டு(கவனிக்கவும் ஜெய்.. படிச்சிட்டல்ல:)) வருகிறேன்.//

வாங்க ..!!நீங்க சொன்னா அப்ப சரிதான் ..அவருக்கு மாலை ஆறு மணிக்கு பிறகு கொஞ்சம் கஷ்டம் அதான் விட்டுடுங்க பாவம் ஹி..ஹி..

//ஜெய்... சொல்றதை விளக்கமா சொல்லோணும், நீங்க பாட்டுக்கு தங்கமணி என்றதை, நான் அப்பாவித் தங்கமணியாக்கும் என தப்பா நினைச்சுட்டேன்.... பிறகு தங்ஸ்ஸ் என்றதும்தான் புரிஞ்சுது, அது என்னமோ தெரியேல்லை, ஸ்ஸ்ஸ் சேர்த்தாதான் எல்லாம் விளக்கமா புரியுது.//

ஆஹா..கோத்து விட்டு வேடிக்கை பாக்குறதா..இனி ஜாக்கிரதையா இருக்கனும் நான்

//நீங்க குண்டா இருப்பீங்களோ என்றொரு சந்தேகம்:), 2வது படத்தைப் போட்டுக்காட்டி, அதை நிரூபிச்சிட்டீங்க:))). //

ஹா..ஹா.. அது நான் இல்லை...அது நான் இல்லை..இல்லை..

//பூனையாரின் எனவுண்ஸ்மெண்ட் சூப்பரோ சூப்பர்...//

தேடும் ஆள் இன்னும் வரவில்லை..:-))

//பேபி பூஸைப்பற்றி(படத்திலிருக்கும்:)) ஒன்றும் சொல்றதுக்கில்ல:). //

ஹி..ஹி.. ஏன் ஒரு பேபி இன்னொரு பேபியை பத்தி சொல்லாதோ..!!நான் பேபியைதான் சொன்னேன்.

//கடசிப்படமும் கப்ஸனும்... கலக்கிட்டீங்க:)..//

வாங்க ..!! சந்தோஷம்..ஹா..ஹா..

//ஒரே ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறனே ஜெய்...... எப்படிக்கண்டுபிடிச்சீங்க.... வயசையும்(20), அரபிப்பொண்ணுதான் என்பதையும்..... போனிலே.... பேர்பியூம் வாசம் ஏதும் வந்துதோ?:)).//

ஆஹா..டேஞ்சரான கேள்வியாச்சே.. இதுக்கு எப்படி சொன்னாலும் வில்லங்க மாச்சே.. ஹி..ஹி.. அது வந்து...வந்து...ஒன்னுமில்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//ஹாஹ்ஹா.. இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா நாங்களும் போன் பண்ணி தெரியாத மொழியில திட்டியிருப்போமே..//

வாங்க ..!!உங்களூக்கு தெரியாத மொழியிலயா இல்ல எனக்கு தெரியாத மொழியிலயா யாப்பா ...தப்பிச்சேன்..ஹா..ஹா..

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//

//இனிமே சந்தேகம் ஏதும் கேட்டா அப்புறம் தூக்கத்தில இண்டர்னேஷனல் ராங் கால்கள் வரும் (உங்களுக்குத் தான்) சொல்லிட்டோம் ஆமா!! //

இப்ப தெரிஞ்சி போச்சே அது நீங்கதான்னு . அதனால வரும் காலை அட்டன் பண்ன மாட்டேனே க்கி..க்கி...இன்போமுக்கு நன்றி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--//என்ன ஒரு நல் மனம்..//

வாங்க ..!! இது மாதிரி மாத்தி சொன்னாதான் டக்குன்னு புரியும். ஹை..இப்ப புரிஞ்சிகிட்டீங்கதானே..

//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் //

ஹா.ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

படங்கள் அருமை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பிரதர்.. வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டு போகுது..

பழைய பதிவுல.. போனை.. எப்படி வாஷிங் மெஷின்ல போட்டு.. கிளீன் பண்ணனுமுனு அழகா சொன்னீங்க..

டிரை பண்ணிப்பாருங்களேன்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஒரு ரிங்க்டோன் டவுன்லோட் பண்ணி இவ்ளோ கஷ்ட பட்டீங்களா...??

அச்சச்சோ... அப்புறம் ஜெய்.. அதென்ன.. போனில் பேசுறத வச்சே வயசு கண்டுபிடிக்கிறீங்க..
அது எப்படின்னு, ஒரு பதிவு போடுங்க..நிறைய பேருக்கு யூஸ் ஆகும் :D :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படம் எல்லாமே சூப்பர் ஜெய்.. அதிலும்.. கூட வர டயலாக் தான் டாப்.. :-))

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//
///இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..///

என்னே ஒரு.. ஆஹா.. இதுவல்லவோ நண்பன்.. வாழ்க வளமுடன்.. :)) //


பாருங்க இவ்வளவு சொல்லியும் அந்த ஒரு வரியை பிடிச்சிக்கிட்டீங்க பாருங்க ..அவ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

//

ஏன்னா ஒரு நல்ல மனசு... //

ஆமாங்க அந்த பயல் எனக்கு பயந்து கிட்டு அதுக்கு பிறகு ரெண்டு நாள் வேளைக்கே வரல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

என்கிட்டே ஒரு நல்ல ரிங்டன் இருக்கு அனுப்பி வைக்கவா...

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//
//யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்//

என்னங்க இது. வைரஸ் அட்டாக்குல பால பாடமே இதுதானுங்களே. எப்படி கோட்டை விட்டீங்க? //

யானைக்கும் அடி சறுக்கும்ன்னு சொல்வாங்களே..!! அது எனக்கும் சேர்த்து தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

kavisiva said...

--//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

//

என்னா வில்லத்தனம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு சாதா வைரஸுக்கா 100திர்ஹம் செலவு பண்ணு னீங்க. அமாக்ஸிலின் ஆன்டிபயாட்டிக்கை தண்ணீரில் கரைச்சி அதுக்குள்ள செல்ஃபோனை முக்கி எடுத்திருந்தீங்கன்னா 5ரூபாயில வேலை முடிஞ்சிருக்குமே :).

படங்களும் டயலாக்கும் கலக்கல்

ஸாதிகா said...

நல்ல விழிப்ப்புணர்வை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கொடுத்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள்.ஆளையே பார்க்காமல் வயதை கண்டுபிடிக்கும் சூட்சுமத்தைப்பற்ரி அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமா?

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//
//நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி.. //

ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..நல்லது//

வாங்க கனி..!! கரெக்டா பாயிண்ட பிடிச்சீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அலைகள் பாலா said...

என் மொபைலுக்கும் ரிங்டோன் அனுப்புடானு என் ஃப்ரென்ட்ட கேட்டா கெட்ட வார்த்தைல திட்டுறாங்க. 2004 மாடல் 1100க்குலாம் அனுப்ப முடியாதுனு.

Jey said...

பதிவு மொக்கை ...படங்கள் சூப்பர்....:) எப்பூடீ..

கண்ணகி said...

பாவம் நீங்க...அந்தப்போனை எத்தனிமுறை அழுத்தி எத்தனி முறை கீழே போட்டு கொடுமை பண்ணிணீங்களோ....பழிவாங்கிடுச்சி...படங்கள் சூப்ப்ர்..

அருண் பிரசாத் said...

ரைட்டு!

Unknown said...

இந்த ரிங்கிங் டோன் பற்றி நானும் ஒரு பத்தி போடா போறானுங்க

Anonymous said...

//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...// ஹி..ஹி..
கொஞ்சம் ஓவர் தான் :)
நைஸ் பிக்சர்ஸ்.

Unknown said...

உங்க அனுபவத்தை ரொம்ப அழகா சிரிக்கும் விதமாய் சொல்லியிருக்கீங்க..

நல்லாயிருந்தது.. அதுலயும் கடைசியா நீங்க சொன்ன நீதியிருக்கே.. சூப்பர் போங்க..

நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டோ-வுல நீங்கதான!!!

Prathap Kumar S. said...

// இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு //
இவ்ளோ நல்லவராயய்யா நீரு... சொல்லவே இல்லை...

இதான் எதைப்பார்த்தாலும் ஆசைப்டக்கூடாதுங்கறது..தேவையா...நல்லவேளை போலீஸ்ஸ்டேசனுக்கு கோல் போகமா இருந்திச்சே... நீரு ஜஸ்ட் மிஸ்சு...

அப்புறம் பதிவைவிட படங்கள் நல்லாருக்கு தல:)) நீங்க படம் மட்டுமே போடக்கூடாது:))

இமா க்றிஸ் said...

இடுகை ;)

அது எதுக்கு பூஸ் போஸ்!!

Anonymous said...

//ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான்//

உண்மை தான்..
அப்புறம் நீங்க சொன்ன நீதி... என்னா ஒரு வில்லத்தனம்???

சாருஸ்ரீராஜ் said...

photos ellam supera irukku..... thangamanikitta avalavu payama appadi than irukanum.

sakthi said...

படங்கள் அருமை மக்கா

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//

//ஆ..... 2 ஆவதா வந்தவர்களே நாந்தான் 1 ஸ்ட் என்னும்போது, 3 வதாக வந்த நானும் 1ஸ்ட் எனச் சொல்வதில் தப்பேயில்லை.... ஆ.... அப்போ “வட” எனக்கே எனக்குத்தான் //

சரி நாம மூணு பேரும் 3-பங்கு போட்டுக்குவோம், இல்ல 1-ஸ்ட்ல வந்த, ஹேமா Siss-கே விட்டுக் கொடுத்திடுவோம். அதான் நல்லப் பிள்ளைக்கு அழகு. இப்ப தான் அவங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க. டயர்டா இருப்பாங்க. சாப்பி டட்டும். சரியா! //

ஆஹா என்னா நல்லமனசு ஒரு அப்பாவியை நா தப்பா நினைச்சுட்டேனே ..(ஒரு வேளை பதுங்குதோ )

////மறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது. //

டூட்டி நேரத்துல தான் இவ்வளவும் நடக்குமா பலே பலே.. எங்ககிட்ட எல்லாம் ஆணி ஆணி என்று சொல்வது சும்மா உடான்ஸ் தானா. சரி அந்த டேமேஜரோட செல் நம்பர் ப்ளீஸ்?? க்கி..க்கி..//

ஹி..ஹி... அது வந்து பாஸ் ஏதோ ஞாபகத்தில உண்மைய உளறிட்டேன் கண்டுகாதீங்க பிளிஸ்..

///ஒரே ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறனே ஜெய்...... எப்படிக் கண்டுபிடிச்சீங்க.... வயசையும்(20), அரபிப்பொண்ணுதான் என்பதையும்..... போனிலே.... பேர்பியூம் வாசம் ஏதும் வந்துதோ?:)).//

ரொம்ப சிம்பிள் அதிரா சிஸ், "மீன் அன்தா (யார் நீ?) என்று ஆரம்பித்து அந்த பொண்ணு கத்தின கத்துல, நம்ம ஆளு “கருவாடு” மாதிரி முழிச்சிருக்கும், இது தான் நடந்திருக்கும். //

அடப்பாவி இப்பதானே நல்லபிள்ள சர்டிஃபிகேட் தந்தேன் அதுக்குள்ள கட்சி மாறிட்டீங்களா

//வேண்ணா கேட்டுப் பாருங்க. பதில் சொல்லாது. அழுத்தம் தாஸ்தி. ஹி..ஹி..//

ச்சே..கத்தலாமில்ல செல்லமா திட்டின மாதிரி தெரிஞ்சுது அவ்வளவுதான் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

உங்களுக்குனு இருக்கும் தனித்துவம் தெரிகிறது அண்ணன்.. பதிவும், படங்களும் ரசிக்கும்படி இருக்கிறது..

ஜெய்லானி said...

@@@rk guru--///ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது///

yenakku purinththathu...//

வாங்க குரு ..!! நீங்க புத்திசாலி டக்குனு புரிஞ்சிடுச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//என்னது கைபேசி பழுது பார்க்க 100 திர்ஹமா? தல இங்க 90 ரியால் கொடுத்தா கைபேசியே வாங்கிடலாம், //

அது ஒன்னுமில்ல பாஸ்,ரி ஃபார்மேட் 30 ரெண்டுதடவை + அப்புறம் கார்டு வேலைக்காவல அது தனி கதை + புதுசா வாங்கியது = இப்ப கணக்கு சரியா...

//அது சரி வைரஸ் வைரஸ் என்று எல்லாரும் சொல்றாங்கள அது யாரு பாஸ்?.//

அது நம்ம பங்காளி பாஸ் ,பக்கத்து வீடு , தோஸ்த் கொஞ்சம் அசந்தா வீட்டுகுள்ள பூந்து நம்மளை கடிச்சி வச்சிடும் .மாட்டுக்கு போடும் ஊசிதான் போடனும் அப்புறமா.ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//அடடா! எனக்கும் முன்பே தெரிந்திருந்தால் நானும் திட்டியிருப்பேன். சந்தூதூ போல.//
ஆஹா.. சான்ஸ் போச்சே உங்களுக்கு

//நானும் அப்பாவி தங்கமணி உங்களை கூப்பிட்டு திட்டினாங்களோ என்று நினைத்தேன். விளக்கமா சொன்னாதானே விளங்கும்.//

ஆஹா..இன்னும் என்னை திட்ட எத்தனை பேர் கியூவில இருக்கீங்களோன்னு தெரியலையேடா சாமிஈஈஈ
//இந்த தொல்லைகளால் தான் நான் இந்த செல் போன் பக்கம் போறதே இல்லை.//

நல்ல பாலிஸி தான். நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கே என்ன சொல்றது.

//நீங்க குண்டா இருப்பீங்களோ என்றொரு சந்தேகம்:), 2வது படத்தைப் போட்டுக்காட்டி, அதை நிரூபிச்சிட்டீங்க:))).//

ஜெய் குண்டன் அல்ல. எனக்குத் தெரியும்.//

வாழ்க தாய்குலமே ..வாழ்க யப்பா...சப்போட் பண்ன ஒரு ஆளாவது இருக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Menaga Sathia said...

ha haa

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//படங்கள் அருமை //

வாங்க ..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//என்ன பிரதர்.. வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டு போகுது..//

ஆமாங் பட்டா போன மாசம் காலையில என்ன சாப்பிட்டேங்கிரது வரவர மரந்து போகுது.ஹி..ஹி..

//பழைய பதிவுல.. போனை.. எப்படி வாஷிங் மெஷின்ல போட்டு.. கிளீன் பண்ணனுமுனு அழகா சொன்னீங்க..

டிரை பண்ணிப்பாருங்களேன்..//

க்கி..க்கி.. ஆ..அப்ப அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குங்கிறீங்க அப்படித்தானே..!! ச்சே..ஜஸ்ட் மிஸ்டு அடுத்த தடவை வந்தா செய்யுறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--// ஒரு ரிங்க்டோன் டவுன்லோட் பண்ணி இவ்ளோ கஷ்ட பட்டீங்களா...?? //

அந்த பயபுள்ள சொல்லவே இல்லை வைரஸ் இருக்கிறத

//அச்சச்சோ... அப்புறம் ஜெய்.. அதென்ன.. போனில் பேசுறத வச்சே வயசு கண்டுபிடிக்கிறீங்க..
அது எப்படின்னு, ஒரு பதிவு போடுங்க..நிறைய பேருக்கு யூஸ் ஆகும் :D :D //

ஆஹா ..வில்லங்கமான கேள்வியா இருக்கே..ஜெய்லானீஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.

//படம் எல்லாமே சூப்பர் ஜெய்.. அதிலும்.. கூட வர டயலாக் தான் டாப்.. :-)) //

ஹி..ஹி... எல்லாம் நம்ம சொந்த பந்தங்கள்தான் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//என்கிட்டே ஒரு நல்ல ரிங்டன் இருக்கு அனுப்பி வைக்கவா...//

எனக்கு அந்த ஆசை எல்லாம் போய் நாளாச்சி சார்..(அடப்பாவிங்களா என்னை திருந்தவே விட மாட்டீங்களா) ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva--//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

//

என்னா வில்லத்தனம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

ஹா..ஹா... அபுபவம் அப்படி..

//ஒரு சாதா வைரஸுக்கா 100திர்ஹம் செலவு பண்ணு னீங்க. //
இது சாதா இல்ல்லீங்க ,ரொம்ப டேஞ்சரான வைரஸ்.(காம் வாரியார் டைப் ) வை ஃபை ஆனில் இருந்தால் அவ்வளவுதான். கேக்காமலேயே வைரஸ் பரவிவிடும் .

//அமாக்ஸிலின் ஆன்டிபயாட்டிக்கை தண்ணீரில் கரைச்சி அதுக்குள்ள செல்ஃபோனை முக்கி எடுத்திருந்தீங்கன்னா 5ரூபாயில வேலை முடிஞ்சிருக்குமே :).//

ம் .அது சளிபிடிச்சிருந்தா குடுக்கிற டேப்லெட்டுங்கோ..நல்லா பாருங்க

// படங்களும் டயலாக்கும் கலக்கல் //

ஹி..ஹி.. சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நல்ல விழிப்ப்புணர்வை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கொடுத்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள்.ஆளையே பார்க்காமல் வயதை கண்டுபிடிக்கும் சூட்சுமத்தைப்பற்ரி அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமா? //

ஸாதிகாக்கா ஒருத்தர் புகழ்றதை ( திட்டுவதை ) வச்சி கண்டு பிடிப்பது கஸ்டமா என்ன ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அலைகள் பாலா--//என் மொபைலுக்கும் ரிங்டோன் அனுப்புடானு என் ஃப்ரென்ட்ட கேட்டா கெட்ட வார்த்தைல திட்டுறாங்க. 2004 மாடல் 1100க்குலாம் அனுப்ப முடியாதுனு.//

அவருக்கு விஷயம் தெரியல அதான் திட்டுறாங்க . பிசி டூ மொபைலில் வயர் போட்டு அனுப்பலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

Ring Tona.. Vambu Vena..

ஜெய்லானி said...

@@@Jey--// பதிவு மொக்கை ...படங்கள் சூப்பர்....:) எப்பூடீ..//

வாய்யா மாப்ளே..!!இனம் இனத்தோடதானே சேரும் எப்பூடி..????..!!! க்கி...க்கி...ஈஈஈஈ( நா படத்தை சொன்னேன் 2வது படம் நீ நாலாம்பு படிச்ச ஸ்கூல்தான் அது இப்ப தெரியுதா ))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கண்ணகி--// பாவம் நீங்க...அந்தப்போனை எத்தனிமுறை அழுத்தி எத்தனி முறை கீழே போட்டு கொடுமை பண்ணிணீங்களோ.... பழிவாங்கிடுச்சி... படங்கள் சூப்ப்ர்.. //

போன் இல்லைங்க ஊட இருந்த தோஸ்த் சொல்லாம இருந்து பழி வாங்கிட்டான் படு பாவி ..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அருண் பிரசாத் -// ரைட்டு! //

வாங்க .!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@A.சிவசங்கர்--// இந்த ரிங்கிங் டோன் பற்றி நானும் ஒரு பத்தி போடா போறானுங்க//

ம்.. போடுங்க ..போடுங்க படிக்க ஆவல்.. அப்புரம் ஏன் இந்த கவிதை போடறதை விட்டிடீங்க ..?.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Balaji saravana--//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...// ஹி..ஹி..
கொஞ்சம் ஓவர் தான் :)
நைஸ் பிக்சர்ஸ். //

ஹா..ஹா..அப்படி நெகட்டிவா சொன்னாதான் மக்களுக்கு புரியும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பதிவுலகில் பாபு--//உங்க அனுபவத்தை ரொம்ப அழகா சிரிக்கும் விதமாய் சொல்லியிருக்கீங்க..
நல்லாயிருந்தது.. அதுலயும் கடைசியா நீங்க சொன்ன நீதியிருக்கே.. சூப்பர் போங்க.. நன்றி.. //

வாங்க பாபு ..உங்களை அப்படி கூப்பிட்டாதானே பிடிக்கும்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Riyas said...

I'M VERY LATE... JUST MISSED GOOOOD POST & PICTURES

Chitra said...

இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..


...... நல்ல மனசு...... வாழ்க வளமுடன்! ஹி..ஹி.......

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சொல்லியிருக்கிங்க அவஸ்தையை :)

athira said...

நான் ஏற்கனவே, வட பங்குபோட்டு ஏமாந்து போயிட்டேன்.... இனியும் பங்குக்கு வரமாட்டேன், ரொம்ப ஸ்ரோங்காஆ... ஸ்ரெடியா(இதிலமட்டும்:)) இருக்கிறேன் எனச் சொல்லிடுங்க ஜெய்.... முன்னாள் நாட்டாமைத் தலைவரிடம்:))).

Anonymous said...

"இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி.. "

ஜெய்லானி சார் வாழ்க ஹி ஹி

சசிகுமார் said...

அருமை நண்பா எல்லாமே incoming call தானே பரவாயில்லை விடுங்க

மங்குனி அமைச்சர் said...

அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும் ///

ஜெய்லானி ஒரு வேல அது fully ஆட்டோமேடிக் போனா இருக்குமோ ?

மங்குனி அமைச்சர் said...

மொத்தத்துல பாத்தா உன் போனுக்கு யாரோ செய்வன செஞ்சுட்டாங்கன்னு நினைக்கிறேன் , நாம் நித்தி கிட்ட போனேன்னா பரிகாரம் சொல்லுவார்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெயலானி இந்த வைரஸ் மற்றும் அது பேச வைத்த அனைத்து வைரஸ் வாய்ஸும் அந்த 20 வயது எல்லாமே “பெலட்டோனா” என்னும் வைரஸ்தான் அது 1989 இல் ஆக்ராவில் உற்பத்தி ஆகி அங்கு நிறைய ஆண்களை துரத்துமாம், அதனால் இரவில் சே மாலை 6 மணிக்கு மேல் எந்த ஆணும் வீட்டுக்கு வெளியே வரமாட்டார்களாம்:))))அந்த பெலடோனா வைரஸ் உங்களிடம் கால்நடையாக வந்து சேர இவ்வளவு நாள் ஆகி இருக்கு :)))


பி.கு: முதலிலேயே தெரியாம போச்சு ...தெரிஞ்சு இருந்தா ஃப்றீ டெலிவரி பண்ணி இருக்கலாமுனு கவலையா இருக்கு:)
வாழ்க வையகம்:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

100% நகைச்சுவை உத்திரவாதம்!

அஃப்ஸர் நிஷா said...

நல்ல தொரு கமெடி ஸ்டோரி நல்ல
தகவல் போன் இல்லாவிட்டால்
கஷ்டம் என்பதை அழகாக
நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க...

படங்களும் அதற்க்கு கொடுத்து
இருக்கும் டயலாக்கும் சூப்பர்
அது சரி குரலை வைத்து
வயதை கண்டு பிடித்து
விடுவீங்களோ அது எப்பூடி
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
அந்த ரகசியத்தை....:-))

r.v.saravanan said...

இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

ஜெய்லானி சொல்லிடீங்க இல்லை இனிமே டவுன்லோட் அப்லோட் பண்ணுவோம்

படங்கள் நல்லாருக்கு அதை விட கமெண்ட் இன்னும் நல்லாருக்கு

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// போட்டோ-வுல நீங்கதான!!! //

என்ன இப்பிடி கேட்டுடீங்க நம்ம சொந்த பந்தங்கள்தான் ஹி..ஹி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாஞ்சில் பிரதாப்--// இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு //
இவ்ளோ நல்லவராயய்யா நீரு... சொல்லவே இல்லை... //

ஆமாங்க ஆமாம் பாவம் நான் ..

// இதான் எதைப்பார்த்தாலும் ஆசைப்டக்கூடாதுங்கறது..தேவையா...நல்லவேளை போலீஸ்ஸ்டேசனுக்கு கோல் போகமா இருந்திச்சே... நீரு ஜஸ்ட் மிஸ்சு...//

அரபி பொண்னு பேச்சை பர்த்துதான் உஷாரானேன் அந்த வகையில தப்பிச்சேன் .நல்ல வேளை

//அப்புறம் பதிவைவிட படங்கள் நல்லாருக்கு தல:)) நீங்க படம் மட்டுமே போடக்கூடாது:)) //

ஒரு சீரியஸ்னைஸை குறைக்கதான் படங்கள் தல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//

இடுகை ;)

அது எதுக்கு பூஸ் போஸ்!! //

ஆஹா.. பக்கத்திலேயே இன்னொரு படத்தை விட்டுட்டீங்களே மாமீ..வித்தியாசமா இருக்கேன்னுதான் .அடுத்திலிருந்து ஆமை படம் போடுரேன் சரியா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

//மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன் //

நோன்பில்லையா?

(மெயின் டாபிக்கை விட்டுட்டு கேக்கிற கேள்வியப் பாருன்னு திட்டக்கூடாது!!)

ஜெய்லானி said...

@@@இந்திரா--//ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான்//

உண்மை தான்..
அப்புறம் நீங்க சொன்ன நீதி... என்னா ஒரு வில்லத்தனம்??? //

வாங்க ..உண்மைதானே எப்பவும் நெகடிவா சொன்னதான் மக்கள் ரசிக்கிறாங்க சட்டுன்னு புரியும் ஹிரோவுக்கு எங்கே மரியாதை .ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//photos ellam supera irukku..... thangamanikitta avalavu payama appadi than irukanum.//

ம் பயமுன்னு ஓன்னுமில்ல நடுக்கமுன்னு வேனா வச்சுகுங்க ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@sakthi--// படங்கள் அருமை மக்கா //

வாங்க ஷக்தி..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--//உங்களுக்குனு இருக்கும் தனித்துவம் தெரிகிறது அண்ணன்.. பதிவும், படங்களும் ரசிக்கும்படி இருக்கிறது..//

வாங்க ..!! அண்ணனாஆஆஆ.நா ஒரு பொடிப்பயங்க ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia --// ha haa //

யக்கோவ்..!! எதை பார்த்து சிரிச்சிங்கன்னு சொன்னா தேவலை கொஞ்சம் பயமா இருக்கு அதான் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--// Ring Tona.. Vambu Vena..//

வாங்க இர்ஷாத்..!! இப்ப உஷராயிட்டோமுல்ல ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Riyas--//I'M VERY LATE... JUST MISSED GOOOOD POST & PICTURES //

வாங்க ரியாஸ் ..!! எப்ப வேனா வரலாம் இது நம்ம வீடு மாதிரி நோ ஃபீலிங்ஸ் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitr--//இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..


...... நல்ல மனசு...... வாழ்க வளமுடன்! ஹி..ஹி.......//

வாங்க டீச்சர்..!!பாருங்க இப்ப பாயிண்டை சரியா பிடிச்சீங்கதானே அதான் வேனும் எனக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

//சிநேகிதன் அக்பர்--// நல்ல சொல்லியிருக்கிங்க அவஸ்தையை :) //

வாங்க அக்பர்..!! .சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//நான் ஏற்கனவே, வட பங்குபோட்டு ஏமாந்து போயிட்டேன்.... இனியும் பங்குக்கு வரமாட்டேன், ரொம்ப ஸ்ரோங்காஆ... ஸ்ரெடியா(இதிலமட்டும்:)) இருக்கிறேன் எனச் சொல்லிடுங்க ஜெய்.... முன்னாள் நாட்டாமைத் தலைவரிடம்:))). //

வடை போனால் என்ன ..? உங்களுக்காக ஸ்பெஷல் இஞ்சி டீ அதுவும் என் கையால் போடு தருகிரேன் . பயப்படாதிங்க ஹெல்துக்கு நா கியாரண்டி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@sandhya--//"இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி.. "

ஜெய்லானி சார் வாழ்க ஹி ஹி //


வாங்க..!! என்னது சார்..? ஸ்கூலிலிருந்து நேரா வறீங்களா..ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--// அருமை நண்பா எல்லாமே incoming call தானே பரவாயில்லை விடுங்க //

ஆமாப்பா..ஆமாம் ஆனா அதில் வருவதென்னவோ டறியல் மேட்டரால்ல இருக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//
அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும் ///

ஜெய்லானி ஒரு வேல அது fully ஆட்டோமேடிக் போனா இருக்குமோ ? //

அதான் எனக்கும் மங்கு புரியாத கவலை .காண்டாக்டில் இல்லத நெம்பராவே இருக்கும் ..

//மொத்தத்துல பாத்தா உன் போனுக்கு யாரோ செய்வன செஞ்சுட்டாங்கன்னு நினைக்கிறேன் , நாம் நித்தி கிட்ட போனேன்னா பரிகாரம் சொல்லுவார் //

இது யாரோ வச்சது இல்ல எனக்கு நானே வச்சிகிட்ட சொந்த சூனியம்..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//அன்பு சகோதரர் ஜெயலானி இந்த வைரஸ் மற்றும் அது பேச வைத்த அனைத்து வைரஸ் வாய்ஸும் அந்த 20 வயது எல்லாமே “பெலட்டோனா” என்னும் வைரஸ்தான் அது 1989 இல் ஆக்ராவில் உற்பத்தி ஆகி அங்கு நிறைய ஆண்களை துரத்துமாம், அதனால் இரவில் சே மாலை 6 மணிக்கு மேல் எந்த ஆணும் வீட்டுக்கு வெளியே வரமாட்டார்களாம்:))))அந்த பெலடோனா வைரஸ் உங்களிடம் கால்நடையாக வந்து சேர இவ்வளவு நாள் ஆகி இருக்கு :))) //

சரிதான் . என் ஃபிரண்டின் போன் சாதா டைப் அதனால் அவனுக்கு பாதிப்பில்லை .மாட்டியது நாந்தான் . இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூனியம் வைக்கிறது பேர் போல


// பி.கு: முதலிலேயே தெரியாம போச்சு ...தெரிஞ்சு இருந்தா ஃப்றீ டெலிவரி பண்ணி இருக்கலாமுனு கவலையா இருக்கு:)
வாழ்க வையகம்:) //

அவ்வ்வ்வ்..பேரக்கேட்டாலே ஒரே உதறலா இருக்கு..அனுபவம் அப்படி ஆச்சே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//100% நகைச்சுவை உத்திரவாதம்! //

வாங்க பாய்..!!. சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நிஷா--//

// நல்ல தொரு கமெடி ஸ்டோரி நல்ல
தகவல் போன் இல்லாவிட்டால்
கஷ்டம் என்பதை அழகாக
நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க...//

வாங்க ஆஹா ருசி..!!உங்களுக்கு காமெடி எனக்கு குலை நடுக்கம் ஹி..ஹி..(ஆனா தப்பிச்சிட்டோமுல்ல)

// படங்களும் அதற்க்கு கொடுத்து
இருக்கும் டயலாக்கும் சூப்பர்
அது சரி குரலை வைத்து
வயதை கண்டு பிடித்து
விடுவீங்களோ அது எப்பூடி
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
அந்த ரகசியத்தை....:-)) //

ஆஹா இது வந்து..வந்து..காத காட்டுங்க ..ஓக்கே இப்ப புரிஞ்சுதா... :-))) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//
இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..

ஜெய்லானி சொல்லிடீங்க இல்லை இனிமே டவுன்லோட் அப்லோட் பண்ணுவோம் //

இனி சாக்கிரதையா செய்யுங்க .எது செஞ்சாலும் .

//படங்கள் நல்லாருக்கு அதை விட கமெண்ட் இன்னும் நல்லாருக்கு //

ஹா..ஹா..சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thenammai Lakshmanan said...

பய புள்ளக்கி என்னா ஒரு நல்ல மனசு..:))

முத்து said...

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ன உன் பேராசை

தினேஷ்குமார் said...

வணக்கம் ஜெய்லானி
ஏதோ ஒருநாளோடு இந்த கூத்து முடிந்ததை நினைத்து சந்தோஷபாடுங்க நானெல்லாம் படாதபாடு பட்டிருக்கேன்
http://marumlogam.blogspot.com

காஞ்சி முரளி said...

////இப்பிடி மதியம் முழுக்க என் தூக்கம் போனதுதான் மிச்சம் .அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும் , லோக்கலாவது பரவாயில்லை .ஒரு ஆள் ஓமானிலிருந்து போன் பண்ணி திட்டினான் . இப்பிடியே ஒரு பஞ்சாபி பொண்னு ( அதுக்கு என்ன கஷ்டமோ ) , கடைசியா அரபி பொண்ணு ( 20 வயசாவது இருக்கும் , எப்படி வயசு தெரியுமுன்னு குறுக்கு கேள்வி யாரும் கேக்க பிடாது ) திட்டிய போதுதான் மண்டையில உறைச்சது. ஆஹா இது போலீஸ் கேசா போயுடுமோன்னு . முதல் வேலையா பேட்டரி , சிம் வரை தனியா கழட்டி வச்சிட்டேன்////

ஏன்னா... அடி...!
பத்து பேரு ரவுண்டு கட்டினாங்க...! விடுவேனா...! நானு...!

சண்டைன்னா சட்ட கிழியத்தா செய்யும்....!
சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு...!

ஹா...! ஹா...!
இதத்தான் எங்க ஊர்பக்கம்...
தன் தலைல தானே கொளிக்கட்டைய தேசுக்கறதுன்னு சொல்வாங்க...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

Mahi said...

ஹாஹ்ஹா!உங்க அனுபவம் புதுமை!!:))))படங்களனைத்தும் அருமை.கேப்ஷன்ஸ் சூப்பரா இருக்கு.

இனி யார்கிட்டவும் செல்போன்ல ரிங்டோன் காப்பி பண்ணுவீங்க??:)

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன் //

நோன்பில்லையா? //

வாங்க ..!! இது நோன்புக்கு முன்னே நடந்தது .

//(மெயின் டாபிக்கை விட்டுட்டு கேக்கிற கேள்வியப் பாருன்னு திட்டக்கூடாது!!) //

ச்சே..ச்சே..நா எங்கே திட்டறது ..திட்டு வாங்கிதான் பழக்கம் ஹய்யோ..ஹய்யோ.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--//பய புள்ளக்கி என்னா ஒரு நல்ல மனசு..:)) //

வாங்க தேனக்கா..!! ஆமாம் அந்த நாதாரி சொல்லாம வாய மூடிகிட்டு இருந்துட்டான் .அப்பவே சொல்லி இருந்தா இந்த தலைவலி வந்திருக்காது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@முத்து--//யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ன உன் பேராசை //

வாய்யா முத்து எங்கே ஆளையே கானோமே .. எதுக்கும் டெல்லிக்கு ஒரு கடிதாசி எழுதி கேக்கலாமுன்னு இருந்தேன் தாத்தா ஸ்டைலில். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@dineshkumar--//வணக்கம் ஜெய்லானி
ஏதோ ஒருநாளோடு இந்த கூத்து முடிந்ததை நினைத்து சந்தோஷபாடுங்க நானெல்லாம் படாதபாடு பட்டிருக்கேன்
http://marumlogam.blogspot.com //

வாங்க ..!! வாங்க ..!! ஒரு நாள் அவஸ்தையே தாங்க முடியல யப்பா...மண்டை காய்ந்து போச்சி..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி --//

ஏன்னா... அடி...!
பத்து பேரு ரவுண்டு கட்டினாங்க...! விடுவேனா...! நானு...!

சண்டைன்னா சட்ட கிழியத்தா செய்யும்....!
சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு...!

ஹா...! ஹா...!
இதத்தான் எங்க ஊர்பக்கம்...
தன் தலைல தானே கொளிக்கட்டைய தேசுக்கறதுன்னு சொல்வாங்க...!

நட்புடன்...
காஞ்சி முரளி...//

வாங்க ..!! வாங்க..!! ஏற்கனவே நல்ல அனுபவம் இருக்கு .. அடிச்சா வலிக்காத மாதிரியே நடிப்போமுல்ல ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mahi--//ஹாஹ்ஹா!உங்க அனுபவம் புதுமை!!:))))படங்களனைத்தும் அருமை.கேப்ஷன்ஸ் சூப்பரா இருக்கு. //

வாங்க ..வாங்க..!!சந்தோஷம்
//இனி யார்கிட்டவும் செல்போன்ல ரிங்டோன் காப்பி பண்ணுவீங்க??:) //

அந்த பேரை கேட்டாலே குலை நடுக்கம் நடுங்குது உடம்பு எனக்கு.. போதுமடா சாமீஈஈஈ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆர்வா said...

இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு கஷ்டவ் வந்திருக்க கூடாது.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எஸ்.கே said...

இந்த மாதிரி நிறைய நடக்குது இப்போதெல்லாம்!

இலா said...

:))
why did you hide the comments link in the top corner...

ஹைஷ்126 said...

ஜெய் மயில் வந்து இருக்கு விடாதீங்கோ:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... தங்கமணி கிட்ட தனி டோஸ் வாங்கினதெல்லாம் சென்சர் போல இருக்கு... சரி சரி... இதெல்லாம் சகஜமப்பா...

//இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு //
ஐ லைக் திஸ் பாலிசி யு நோ... ஹி ஹி ஹி

நீங்களே பஞ்சாபி பொண்ணு... அரபி பொண்ணுகெல்லாம் போன் பண்ணிட்டு நல்லா சமாளிக்கரீங்க சார்... ஹா ஹா ஹா

Abdulcader said...

எவன்டா இந்த வைரசை கண்டுபுடிச்சது.
அவனே?

Butter_cutter said...

nallairukku nanba

Jaleela Kamal said...

ஒரே சிரிப்பு படங்கள்

ஆஹா அதிராவின் பூஸ் இங்கு எபப்டி மைக் டெஸ்டிங்கு வந்தது.

அன்புடன் மலிக்கா said...

ஐ நாந்தான் லாஸ்ட்.

அண்ணாத்தே எப்புடிகிறீங்கோ. நான் இல்லாதது ஒரே குஷியா இருந்திருக்குமே. ஆத்தாடி மீண்டும் வந்தாச்சோன்னு சொல்லுவது கேக்கலை ஹி ஹி.

போட்டோக்களின் நல்லாத்தேன் போஸ்கொடுக்குறீங்க
அதிலும் மைக் டெஸ்டிங் சூப்பர்..
நல்ல செய்தியை காமெடியோடு சொல்லியவிதம் சூப்பரப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

ஜெயந்தி said...

செல்போன்லகூட வைரஸ அனுப்பத் தொடங்கிட்டாங்களா? உருப்பட்டாப்பலதான்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்க்ள்.

அன்புடன் நான் said...

மன்னிக்க... வருத்தங்கள்.

அன்புடன் நான் said...

சும்மா... துன்பம் வரும் வேலையில...சிரிங்கன்னு சொல்லுவாங்கல்ல....

அன்புடன் நான் said...

உங்க அனுபவம்.... எங்களுக்கு பாடம்
பகிர்வுக்கு நன்றிங்க.

பத்மா said...

பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி

ஜெய்லானி said...

@@@கவிதை காதலன்--// இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு கஷ்டவ் வந்திருக்க கூடாது.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

வாங்க ..!! ஆமாங்க கொஞ்ச் நேரத்தில தலையே சுத்திப்போச்சி இந்த வைரஸால..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எஸ்.கே--//மாதிரி நிறைய நடக்குது இப்போதெல்லாம்! //

வாங்க..!! இதுக்குதான் நாம உஷாரா இருக்கோனும்.. இல்லாட்டி தேவை இல்லாத பிரச்சனைகள வரும் . சில நேரம் லாரியே கூட வரும்..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--//

:))
why did you hide the comments link in the top corner... //

வாங்க..!! இது டெம்லேட்டின் டிசைன் அப்படி . ஒன்னும் செய்ய முடியல.. டிஸைன் மைல்டா கண்ணுக்கு உறுத்தாம இருப்பதால் இது வரை மாத்த ஐடியா வரல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126 --// ஜெய் மயில் வந்து இருக்கு விடாதீங்கோ:) //

ஆமாங்க எப்படியே வழி தவறி வந்த மாதிரி இருக்கு..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--/ ஹா ஹா ஹா... தங்கமணி கிட்ட தனி டோஸ் வாங்கினதெல்லாம் சென்சர் போல இருக்கு... சரி சரி... இதெல்லாம் சகஜமப்பா...//

வாங்க ..!! ஹி..ஹி.. தினமும் நடக்கும் கூத்துதானே இது..

//இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு //
ஐ லைக் திஸ் பாலிசி யு நோ... ஹி ஹி ஹி

// நீங்களே பஞ்சாபி பொண்ணு... அரபி பொண்ணுகெல்லாம் போன் பண்ணிட்டு நல்லா சமாளிக்கரீங்க சார்... ஹா ஹா ஹா //

ச்சே..ச்சே.. நானே வலிய போய் அடிவாங்குற ஆளா என்ன ...அதான் வைரஸின் வேலை .. வேனுன்னா சொல்லுங்க பார்ஸல் மெயிலில் அனுப்புரேன் .. வேனுமா..? ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காயலாங்கடை காதர்--// எவன்டா இந்த வைரசை கண்டுபுடிச்சது. அவனே? //

அதான் பாஸ் என்னுடைய கேள்வியும் ..பயங்கர தலைவலி சமாசாரம் இது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@winstea--// nallairukku nanba //

வாங்க வின்ஸ்டியா...!! அவ்வ்வ்வ்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//ஒரே சிரிப்பு படங்கள் //

வாங்க ..!!நல்ல வேளை உள்ளே படிக்கல தப்பிச்சேன் நான்

// ஆஹா அதிராவின் பூஸ் இங்கு எபப்டி மைக் டெஸ்டிங்கு வந்தது. //

வரதா ..?? பிடிச்சி கொண்டு வந்துட்டோமுல்ல எப்பூடி..? ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--// ஐ நாந்தான் லாஸ்ட். //

வாங்க ..!! அக்கா நம்ம வீட்டுக்கு முதல்ல வந்தாலும் சரி கடைசில வந்தாலும் சரி வந்தாலே போதுமே...சந்தோஷம்தானே!!

// அண்ணாத்தே எப்புடிகிறீங்கோ. நான் இல்லாதது ஒரே குஷியா இருந்திருக்குமே. ஆத்தாடி மீண்டும் வந்தாச்சோன்னு சொல்லுவது கேக்கலை ஹி ஹி. //

நலம் , ச்சே..ச்சே.. நீரோடையே வற்றியது மாதிரி ஃபீலிங்

//போட்டோக்களின் நல்லாத்தேன் போஸ்கொடுக்குறீங்க
அதிலும் மைக் டெஸ்டிங் சூப்பர்..
நல்ல செய்தியை காமெடியோடு சொல்லியவிதம் சூப்பரப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ //


ஹா..ஹா.. நல்ல செய்தியா நான் திட்டு வாங்கியது அவ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//செல்போன்லகூட வைரஸ அனுப்பத் தொடங்கிட்டாங்களா? உருப்பட்டாப்பலதான்.//

வாங்க ..!! ஜாவா என்னேபிள்டு போனில இது வரும் .அனுப்ப முடியும் . மற்றபடி சாதாரன போனில் ஒன்னும் பண்ணமுடியாது.. பயம் வேண்டாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--// வாழ்த்துக்க்ள்.//

வாங்க வாழ்த்துக்கு நன்றி..
//மன்னிக்க... வருத்தங்கள்.//

ஏங்க என்ன ஆச்சு.. நான் ஜாலிடைப்தான் பயப்படாதீங்க..

//சும்மா... துன்பம் வரும் வேலையில...சிரிங்கன்னு சொல்லுவாங்கல்ல...//

ஹா..ஹா.. எனக்கு இது கொஞ்சம் ஓவராவே வரும் ..ஹி..ஹி..

//உங்க அனுபவம்.... எங்களுக்கு பாடம்
பகிர்வுக்கு நன்றிங்க.//

கண்டிப்பா ..இனி உஷாரா இருக்கோனுமில்ல .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பத்மா--// பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி //

வாங்க ..!!வாங்க..!!நலமா.. ரொமப நாளா ஆளையே கானோம்.. சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

jamunnn!!! said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!

இது வேறயா.....
எதுக்கு வம்பு....
சொல்லிட்டே போறேன்....
போயிட்டு வாறன்!!!!!!!!!!!!

ஜெய்லானி said...

@@@jamunnn!!! --//

இது வேறயா.....
எதுக்கு வம்பு....
சொல்லிட்டே போறேன்....
போயிட்டு வாறன்!!!!!!!!!!!! //

வாங்க ...வாங்க.. ஜாமூன் ((நல்ல பேரா இருக்கே..)) ..வந்த்துக்கு சந்தோஷம்... சொல்லிட்டு போனது அதை விட சந்தோஷம் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))